முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (10.08.1950) - கம்யூனிஸ்டுகள் மிரட்டலுக்கு சர்க்கார் பணியாது: சர்தார் பட்டேல் உறுதி

கம்யூனிஸ்ட் கட்சியின் தந்திரங்களில் மாறுதல் ஏற்பட்டிருப்பினும் சரி, மாறுதல் ஏற்பட்டிராவிடினும் சரி. பலாத்கார கிளர்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற அடிப்படை கொள்கையில் கொஞ்சம்கூட மாறுதல் கிடையாது. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சியின் மீது சர்க்காரின் கொள்கை மாறவில்லை என்று சர்தார் பட்டேல் பார்லிமென்ட்டில் அறிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

கம்யூனிஸ்ட் கட்சியின் தந்திரங்களில் மாறுதல் ஏற்பட்டிருப்பினும் சரி, மாறுதல் ஏற்பட்டிராவிடினும் சரி. பலாத்கார கிளர்ச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற அடிப்படை கொள்கையில் கொஞ்சம்கூட மாறுதல் கிடையாது. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சியின் மீது சர்க்காரின் கொள்கை மாறவில்லை என்று சர்தார் பட்டேல் பார்லிமென்ட்டில் அறிவித்தார்.

பலாத்கார மார்க்கங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதலில்லை என்றும், சட்டரீதியான மார்க்கங்கள் என்பது இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு புதுமையென்றும் கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே தெரிவித்துள்ளார். அதுபோன்ற முயற்சிக்கு சர்க்கார் இடம் தர மாட்டார்கள். அதை (பலாத்காரத்தை) ஒடுக்குவதில் சர்க்கார் தனது முழு சக்தியையும் ஈடுபடுத்துவார்கள். எல்லா உறுப்பு ராஜ்யங்களின் ஏகமனதான அபிப்ராயமும் இதுவே.

ஹைதராபாத் சமஸ்தானத்தில் மட்டும் இதுவரை ஸ்திரீகள், குழந்தைகள் உள்பட 2500 பேரை கம்யூனிஸ்ட் கட்சி கொலை செய்திருக்கிறது. யாதொரு தவறும் செய்யாத டிராம், பஸ் பிரயாணிகள் மீது திராவக பல்புகளையும், கைகுண்டுகளையும் வீசுகின்றனர்.

Advertisement

தடை உத்தரவுகளையும் மீறி பலாத்கார ஆர்பாட்டம் செய்கின்றனர். சட்டரீதியான முறைகளைப் பின்பற்றி முன்னேற்றம் ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் என்ற அற்ப காரணத்துக்காக அரசியல் விரோதிகளை படுகொலை செய்யும்படித் தூண்டுகிறார்கள்.

ராஜ்ய சர்க்கார்களின் ஒத்துழைப்புடன் அந்தப் பேராபத்தை தடுப்பதற்கான முயற்சிகளை சர்க்கார் மேற்கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டு கட்சி மீதி இந்திய சர்க்காரின் கொள்கையை தீர்க்கமான ஆலோசனையின் பேரில் நேரு அறிவித்தார். பலாத்கார பயமுறுத்தலுக்கு சர்க்கார் பணியாதென்றும், அதை முழு பலத்துடன் எதிர்ப்போம் என்றும் நேருஜி சொன்னதை சர்க்கார் மாற்றிக்கொள்ளாது என்று பட்டேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments