முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று - (12.08.1952) - உத்தியோகங்களுக்கு ஆடவர்களுடன் பெண்கள் போட்டியிட வேண்டியதில்லை; குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியப் பொறுப்பு - சி.சுப்பிரமணியம்

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நமது பெண்களின் கல்வி முறையைத் திருத்தி புதிய முறையில் மாற்றி அமைத்தால்தான், நம்மால் நமது சிறுவர் சிறுமிகளின் கல்விப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று சென்னை சர்க்காரின் நிதி மந்திரி சி. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நமது பெண்களின் கல்வி முறையைத் திருத்தி புதிய முறையில் மாற்றி அமைத்தால்தான், நம்மால் நமது சிறுவர் சிறுமிகளின் கல்விப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று சென்னை சர்க்காரின் நிதி மந்திரி சி. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆரம்பப் பள்ளியாகத் திகழ வேண்டும் என்றும், தாயார்கள் தகுந்த பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும், கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது என்றும், கல்வி போதனையின் ஆரம்பக் கட்டத்தில் நிபுணர்களின் உதவியைப் பெற வேண்டும் என்றும், ஆரம்பக் கல்வியை லட்சக்கணக்கான குழந்தைகளைப் போதிப்பதற்கு உபாத்தியார்களுக்குச் சம்பளம் கட்டுபடியாகாதென்றும், ஆகவே ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆரம்பப் பள்ளியாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்குத்தான் பெண்களுக்குப் பயற்சி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இன்ஜினீயர்களாகவோ அன்றி சர்க்கார் காரியாலயத்தில் குமாஸ்தாக்களாகவோ ஆடவர்களுடன் போட்டியிடக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளுக்குத் தாயாக இயற்கையாகவே விரும்புகிறாள். ஆகவே அந்த விருப்பத்துக்கு தகுந்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும்.

Advertisement

கல்வி முழுவதும் சர்க்காரின் ஒரு இலாகா பொறுப்பாகிவிடக்கூடாது. தனிப்பட்ட சொந்த கல்வி ஸ்தாபனங்கள் ஏற்பட வேண்டும். அந்தகைய பள்ளிகள் மற்ற பள்ளிகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். திறமை வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை நடத்தினால் இன்ஸ்பெக்ஷனுக்கே அவசியம் இல்லை.

தேசத்தின் தேவைக்கு தகுந்த முறையிலேயே கல்வி அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் கல்வியைச் சீர்திருத்துவது பற்றி பரிசீலனை நடத்தி வருகிறோம். பெரும்பாலான யுவர்கள் தமது கல்வியை முடித்துக்கொண்டதும் தமது பரம்பரைத் தொழிலை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பியதும் தமது வீடுகளில் இருப்பது அயலிடங்களில் இருப்பது போன்று கருதுகிறார்கள் என்றார் சி.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments