இந்த நாளில் அன்று (05.07.1976) கலியுக அதிசயம்: 88 வயதில் 168-வது தடவையாக திருமணம்!
கலியுகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடக்குமென்று சொல்லுவார்கள். ஆனால், மனதினால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு அதிசயச் செய்தி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கிடைத்திருக்கிறது.
கலியுகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடக்குமென்று சொல்லுவார்கள். ஆனால், மனதினால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு அதிசயச் செய்தி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கிடைத்திருக்கிறது.
யாஹியா அலி அக்பர் பெய்க் நூரி என்பவருக்கு இப்போது வயது 88. அவர் இதுவரையில் 167 தடவை மணம் செய்துகொண்டிருக்கிறார்.
தனக்கு எவ்வளவு மனைவிகள் என்ற கணக்கு மட்டும்தான் அவருக்கு நினைவிருக்கிறது. இந்த மனைவிமார்களிடம் தனக்கு எவ்வளவு குழந்தைகள் பிறந்தன என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாது.
Advertisement
167 மனைவிகளை மணந்த நூரிக்கு இன்னும் மனைவி ஆசை விடவில்லை போலிருக்கிறது. 168-வது தடவையாக மணம் செய்துகொள்ள அவர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்.
இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெண்களை எப்படி வசீகரம் செய்ய வேண்டுமென்று தெரியவில்லையே என்று ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஒரு பெண்ணின் உள்ளத்தை எப்படிக் கவருவது என்று இளைஞர்களுக்குத் தெரியவே இல்லை. நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன். ஒருத்தியுடன் பேச ஆரம்பித்த 10 நிமிஷங்களுக்குள்ளாகவே அவள் என்னை மணந்துகொள்ள சம்மதித்திருக்கிறாள் என்று அந்தப் பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார்.
167 மனைவிகளை மணந்துகொள்ளும் சக்தி அவருக்கு எப்படி வந்தது என்று பலர் ஆச்சரியப்படலாம். தினசரி ஒரு கிலோ பச்சை வெங்காயத்தை அவர் தின்கிறார். இதுதான் அவருடைய வீரியத்தின் ரகசியமாம்.