முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (08.07.1980) சாலை விபத்து - உதவிக்கு வந்தவர்கள் போல் நடித்து உடைமைகளைப் பறித்துச் சென்ற கயவர்கள்

திருச்சி அருகே ஏற்பட்ட லாரி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களிடம் இருந்து, உதவிக்கு வந்தவர்கள் போல் நடித்து உடைமைகள் திருடப்பட்டன. அத்தகைய கயவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

திருச்சி அருகே ஏற்பட்ட லாரி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களிடம் இருந்து, உதவிக்கு வந்தவர்கள் போல் நடித்து உடைமைகள் திருடப்பட்டன. அத்தகைய கயவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

விபத்து ஏற்பட்டவுடன், சுமார் 10 நபர்கள் கையில் டார்ச் லைட்டுகளுடன் சைக்கிள்களில் விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ளனர். அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்தவர்களின் கைக்கடிகாரங்கள், மணிபர்ஸுகள் போன்றவற்றை எடுத்துச் சென்றதுடன், கையில் அணிந்திருந்த மோதிரங்களையும் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

உடைமைகளைப் பறிகொடுத்தவர்களில் ஆலந்தூரான்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமியும் ஒருவர்.

Advertisement

விபத்து ஏற்பட்டவுடன் காயம் அடைத்து சாலையில் கிடந்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்து மணிபர்ஸை கயவர்கள் பறித்துக்கொண்டதாகவும் அதில் ரூ.300 இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை என்பவரிடம் இருந்து ரூ.800 மதிப்புள்ள கைக்கடிகாரம் பறித்துக்கொள்ளப் பட்டதாகவும், முருகேசன், ராமசாமி ஆகியோரிடம் இருந்து அவர்கள் விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களை அந்தக் கயவர்கள் கழற்றி எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், விபத்தில் காயமடைந்த பலர் இவ்வாறு உடைமைகளை இழந்துள்ளனர். லாரியின் உட்புறம் வைக்கப்பட்டிருந்த ஆம்ப்ளிபயர் செட்டையும் அக் கயவர்கள் விட்டுவைக்கவில்லையாம். அதையும் தூக்கிச் சென்றதாகக்  கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments