இந்த நாளில் அன்று(14.7.1986)தமிழகத்தில் மேலவை ஒழிப்பு - மறு பரிசீலனை இல்லை: எம்ஜிஆர் திட்டவட்டம்
தமிழக அரசைப் பொறுத்தவரை மேலவை ஒழிக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் மறு பரிசீலனை ஏதும் இல்லை என்று முதல்வர் எம்ஜிஆர் தெரிவித்தார்.
தமிழக அரசைப் பொறுத்தவரை மேலவை ஒழிக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் மறு பரிசீலனை ஏதும் இல்லை என்று முதல்வர் எம்ஜிஆர் தெரிவித்தார்.
மாநில மேலவையை ஒழிக்க மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தாம் வலியுறுத்தப் போவதாக அவர் சொன்னார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது தமது அமைச்சரவையை விரிவுபடுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சொன்னார். அஇஅதிமுகவில் அடுத்த தலைவராக அறிவிக்கப்படும் பிரச்னையே தற்போது எழவில்லை. அடுத்தபடி தலைவராக வரக்கூடியவர் எனக்கு யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
Advertisement
மன்ற உறுப்பினர்கள் ஒரு சிறு கத்தியை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என தாம் ஆலோசனை கூறியது உண்மையே. எதிராளிகளிடம் இருந்து தம்முடைய கட்சியினரை போலீஸார் பாதுகாக்க இயலாத நிலை ஏற்பட்டால், அப்போது அந்த கையடக்கக் கத்தியைத் தற்காப்புகாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற நோக்கத்திலேயே அப்படிச் சொன்னதாக அவர் கூறினார்.