முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று (16.07.1988)இ.காங்கிரஸுக்கு எதிரான சக்திகளை ஒன்றுசேர்க்க முயற்சிக்கப்போகிறேன் - சிவாஜி கணேசன்

இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக தமிழக முன்னேற்ற முன்னணித் தலைவர் சிவாஜி கணேசன் கூறினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக தமிழக முன்னேற்ற முன்னணித் தலைவர் சிவாஜி கணேசன் கூறினார்.

தமிழகத்தில் இப்போது தேர்தல் வைத்தால் இ.காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என்பதால்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உடனடியாகத் தேர்தல் நடந்த வேண்டும் என்று தமது கட்சி கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தள்ளி போடப்பட்டது தமிழக முன்னேற்ற முன்னணிக்கு ஒரு சாதகமான அம்சம் என்றும், அந்த அவகாசத்தில் தனது கட்சியை வளர்த்துக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

Advertisement

இ.காங்கிரஸ் கட்சியின் லட்சியம் சமதர்ம சமுதாயத்தை நிறுவுவதுதான் என்று அக் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுடைய ஆட்சியில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சம்பள விகிதமும், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு சம்பள விகிதமும் அளிக்கப்படுகிறது. இப்படிச் சம்பளத்திலேயே பேதம் காட்டுவது எப்படி சமதர்ம சமுதாயமாகும் என்று அவர் கேட்டார்.

பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இல்லை என்று சொன்ன அவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து 400 கோடி கன அடி நீரைப் பெற்றுத் தருவதாக அண்மையில் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால், இன்றளவும் அதை நிறைவேற்றவில்லை என்று சிவாஜி குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று இந்திய அரசுத் தரபிப்பில் கூறப்டுவதை அரசியல் ஸ்டன்ட் என்று அவர் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments