இந்த நாளில் அன்று(18.07.1990)காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆறு மாத கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநரின் ஆறு மாத கால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்பட்டுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று மாநில ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்திருந்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று, இந்திய அரசியல் சட்டத்தின் 356-வது விதியின்கீழ் இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார்.
Advertisement
குடியரசுத் தலைவரின் பிரகடனத்தின்படி ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் அனைத்து அதிகாரங்களும், கடமைகளும் மாநில ஆளுநரிடம் விடப்பட்டுள்ளது. மாநில சட்டப் பேரவையின் அதிகாரங்களை நாடாளுமன்றம் செயல்படுத்தும்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கென அரசியல் சட்டத்தில் சிறப்பு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி அந்த மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் ஆளுநர் ஆட்சியை நீடிக்க முடியாது.
ஜம்மு - காஷ்மீரில் ஜூலை 19-ம் தேதி ஆளுநர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த மாநில ஆளுநராக ஜக் மோகன் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து அன்றைய முதலமைச்சர் பாரூக் அப்துல்லா பதவி விலகியதை தொடர்ந்து ஆளுநர் ஆட்சியின் கீழ் அந்த மாநிலம் கொண்டு வரப்பட்டது.