இந்த நாளில் அன்று(21.07.1993)காவிரி நீர் விவகாரம் - முதல்வர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் முடிந்தது; கண்காணிப்புக் குழு அமைக்க மத்திய அரசு உறுதி
காவிரி நடுவர் மன்ற இடைக்காதல் தீர்ப்பு அமல் செய்யப்படுவதைக் கண்காணிப்பதற்கு கமிட்டி அமைக்க மத்திய அரசு உறுதி அளித்தது. இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கடந்த நான்கு தினங்களாக மேற்கொண்டிருந்த 81 மணி நேர உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா, நலத் துறை இணையமைச்சர் தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.
உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு பேசிய ஜெயலலிதா, தான் மேற்கொண்ட அறப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன் கூறினார்.
Advertisement
காவிரி நீர்ப் பிரச்னை குறித்த அடிப்படைப் புள்ளிவிவரங்களைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய அரசு இணங்கியுள்ளது. அந்தக் குழு, நடுவர் மன்றத் தீர்ப்பை அமல் செய்வதைக் கண்காணிக்க அமலாக்கக் குழுவை அமைக்கும்.
இந்தக் குழுவில் மத்திய அரசின் காபினட் செயலர், காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் இடம்பெறுவர். இக்குழு, கண்காணிப்புக் குழு பரிந்துரையின்படி நடுவர் மன்றத் தீர்ப்பு அமல் செய்யப்படுவதை உறுதி செய்யும் என்றார்.