இந்த நாளில் அன்று(25.07.1997)விலகினார் லாலு; முதல்வரானார் மனைவி
ரூ.950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ரூ.950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
தமது மனைவி ரப்ரி தேவியை முதல்வராக்குமாறு ஆளுநர் ஏ.ஆர்.கித்வாயிடம் லாலு சிபாரிசு செய்தார். இதையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ரப்ரி தேவி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தான் குற்றவாளியாக்கப்பட்டிருப்பதாகவும், பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் லாலி அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த நெருக்குதலுக்குப் பணிந்து ராஜிநாமா செய்துள்ளார்.
Advertisement
லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி, பிகாரின் 26-வது முதல்வராகப் பதவி ஏற்றார். பிகார் மாநில முதல்வராகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி இவர்.
பதவியேற்பு விழாவில் லாலு பிரசாத் யாதவும் கலந்துகொண்டார். இறுக்கமான முகத்துடன் இருந்தார். சட்டப்பேரவையிலோ சட்ட மேலவையிலோ ரப்ரி தேவி உறுப்பினர் இல்லை. அரசியல் அனுபவம் துளியும் இல்லாதவர். முதல்வராகப் பதவி ஏற்கும்போது பதற்றத்துடன் காணப்பட்டார்.