இந்த நாளில் அன்று(28.07.2000)கான்வென்ட் பள்ளிகள் தமிழில் கற்பிக்க முன்வர வேண்டும் - க.அன்பழகன் வலியுறுத்தல்
கான்வென்ட் பள்ளிகள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்க முன்வர வேண்டும் என்று கல்வி அமைச்சர் க.அன்பழகன் வலியுறுத்தினார்.
கான்வென்ட் பள்ளிகள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்க முன்வர வேண்டும் என்று கல்வி அமைச்சர் க.அன்பழகன் வலியுறுத்தினார்.
தாய் மொழியில் தரக்கூடிய ஊட்டத்தை ஆங்கிலத்தில் அளிக்க இயலாது. ஐந்தாவது அல்லது ஆறாம் வகுப்பு வரையிலாவது தாய் மொழியில் பயிலக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆங்கிலத்தை கட்டாயப்படுத்தி கற்பிப்பதால், தாய் மொழி தரும் ஊக்கத்தை அது அளிக்காது.
கான்வென்ட் பள்ளிகள் தமிழ் மொழிக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று கருதவில்லை. தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததில் கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. உலக அளவில் ஏற்கக்கூடிய மொழி தமிழ் என்பதை டாக்டர் கால்டுவெல் மற்றும் ஜி.யூ.போப் உணர்ந்திருந்தனர். அதற்காக அவர்கள் பாடுபட்டனர்.
Advertisement
கல்வியானது ஒழுக்கத்தோடு இணைக்கப்படாதவரை அது முழுமை பெறாது என்றார் அன்பழகன்.