முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(30.07.2002)குடிநீர்ப் பிரச்னைக்கு முன்னுரிமை: ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா ஆணை

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

வறட்சி நிவாரணம் குறித்து நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது -

குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க ஆட்சியர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிநீர் பிரச்னைகள் குறித்து தகவல்கள் சேகரிக்க ஒரு திட்டத்தை ஆட்சியர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

Advertisement

கடந்த ஜனவரியில் இருந்து தமிழகத்தில் 13 சதவீத அளவுக்கு குறைவான மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்திருந்தாலும், சில மாவட்டங்களில் 60 சதவீதம் வரை மழை குறைந்துள்ளது.

இச் சூழ்நிலையைச் சமாளிக்க, இயற்கை சீற்ற நிவாரண நிதியில் இருந்து 22 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கி குடிநீர் சப்ளையை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

விவசாயிகள் மறுசாகுபடி செய்ய விரும்பினாலோ, மாற்று பயிர் சாகுபடி செய்ய விரும்பினாலோ அவர்களுக்குத் தேவையான இடுபொருள்கள் போதிய அளவுக்குக் கிடைப்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக இந்த நிலையிலும் பொது விநியோகத் திட்டத்துக்குத் தேவையான உணவு தானியம் கையிருப்பு உள்ளது. இப்போதைய நிலையில் பொது விநியோகத் திட்டத்தை முழு திறனுடன் செயல்படுத்துவதில் ஆட்சியர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

பருவ நிலை மோசமாகப் போனாலும், தமிழகத்தில் எந்த ஒரு நபரும் பட்டினியால் இறக்கக்கூடாது என்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments