இந்த நாளில் அன்று(03.08.1940)மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர் காலமானார்
மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர், பெங்களூர் அரண்மனையில் அமைதிகரமாகக் காலமானார். அவருக்கு வயது 57.
மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் பகதூர், பெங்களூர் அரண்மனையில் அமைதிகரமாகக் காலமானார். அவருக்கு வயது 57.
சில நாள்களுக்கு முன் மகாராஜாவுக்கு இதய நோய் கண்டது. குணமாகி வந்து மீண்டும் அந் நோய் ஏற்படவும் மரணம் நேர்ந்தது. மரண தருவாயில் மகாராணி, யுவராஜா, யுவராணி, திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் முதலிய முக்கிய சர்க்கார் ஆபீஸர்கள் அரண்மனையில் பிரசன்னமாகி இருந்தார்கள்.
நாளை மைசூரில் தகனக்கிரியை நடைபெறும். மகாராஜா உடலுடன் திவான் ஸர். மிர்ஸா இஸ்மாயில் மைசூருக்குப் புறப்படுகிறார். மகாராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அறிகுறியாக நாளை முதல் 13 தினங்கள் வரையில், சமஸ்தானம் எங்கும் உள்ள சர்க்கார் ஆபீஸ்கள், கோர்ட்டுகள், கல்வி ஸ்தாபனங்கள் இவைகளை மூடிவிட வேண்டும் என்ற உத்தரவு வெளியிட்பட்டுள்ளது.
Advertisement
மகாராஜா மறைவையொட்டி, மகாராஜாவின் வயதை ஒத்தாற்போல் பெங்களூரிலும் மைசூரிலும் 57 குண்டுகள் போடப்பட்டன.