முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(25.06.1966)சுதந்தரா கட்சியில் சேர காமராஜுக்கு ராஜாஜி அழைப்பு

சுதந்தராக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் அது வெற்றியடைய உதவி செய்யும்படி காங்கிரஸ் அக்ராஸனார் ஸ்ரீ காமராஜுக்கு ராஜாஜி அழைப்பு விடுத்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

சுதந்தராக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் அது வெற்றியடைய உதவி செய்யும்படி காங்கிரஸ் அக்ராஸனார் ஸ்ரீ காமராஜுக்கு ராஜாஜி அழைப்பு விடுத்தார்.

சுதந்தராக் கட்சியில் ஸ்ரீ காமராஜ் சேர்ந்தால், அவருக்கு கட்சித் தலைமைப் பதவி அளிக்கப்படும் என்று ராஜாஜி குறிப்பிட்டார்.

ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதை சுதந்தராக் கட்சி கண்டித்திருக்கிறது என்றும், ரூபாய் மதிப்பைப் குறைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஸ்ரீ காமராஜும் உணர்ந்திருக்கார் என்றும் ராஜாஜி கூறினார்.

Advertisement

ஸ்ரீ காமராஜுடன் தாம் கொண்டிருந்த தொடர்பை எடுத்துக்கூறிய சுதந்தராக் கட்சி ஸ்தாபகர் ராஜாஜி, நேர்மைக் குணத்தினாலேயே ஸ்ரீ காமராஜ் காங்கிரஸ் அக்ராஸனராக முடிந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments