இந்த நாளில் அன்று (30.6.1971) இந்தியாவில் மொத்தம் ஏழு காங்கிரஸ் கட்சிகள்!
இந்தியாவில் மொத்தம் ஏழு காங்கரிஸ் கட்சிகள் உள்ளன. கேரளத்தில் இருந்த பழைய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் ஏழு காங்கரிஸ் கட்சிகள் உள்ளன. கேரளத்தில் இருந்த பழைய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கேரள சட்டப்பேரவையில் நான்கு மெம்பர்களைக் கொண்ட பழைய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இவர்களில் மூன்று பேர் 'காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி' என்ற புதுக் கட்சியை அமைத்தார்கள்.
தடுப்புக் காவல் சட்டத்தைக்கொண்டு வருவதிலும், புழக்கடை வழியாக ஹிந்தியை திணிப்பதிலும் புதுக் காங்கிரஸுக்கு பழைய காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தந்ததாகவும், அதன் காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Advertisement
கேரளத்தில் பழைய காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு புதிதாக காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டிருப்பதால், இந்தியாவில் காங்கிரஸ் என்ற பெயர் உள்ள கட்சிகள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.
புது காங்கிரஸ், பழைய காங்கிரஸ், கேரள காங்கிரஸ், சோஷலிஸ்ட் காங்கிரஸ், ஜன காங்கிரஸ், உத்கல் காங்கிரஸ், பங்களா காங்கிரஸ் என்பவை அந்த ஏழு காங்கிரஸ்கள்.
இவற்றில் முதல் நான்கு காங்கிரஸ்கள் கேரளத்தில் இருக்கின்றன.