இந்த நாளில் அன்று(01.07.1972)பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஹிந்து மதத்தில் அக்கறை கொண்டிருக்கும்வரை ஹிந்து மதம் வளர்ச்சி அடையும் - காஞ்சி சங்கராச்சாரியார்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஹிந்து மதத்தில் அக்கறை கொண்டிருக்கும்வரை ஹிந்து மதம் வளர்ச்சி அடையும்
நில உடைமை உச்சவரம்பு நடவடிக்கைகளை அமலாக்கும்போது டிரஸ்டுகள், சமய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை தனியே விட்டுவிடுவதன் அவசியத்தை சர்க்காருக்குத் தக்கவாறு எடுத்துக்கூற இயக்கமொன்று தேவை என காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவதாவது -
மைசூர் மாநிலத்தில் அறநிலைய போர்டு எதுவும் இல்லை. சர்க்காரும் சமயம், ஆலயங்கள் விவகாரத்தில் தலையிடுவதில்லை. மைசூரில் ஹிந்து அறநிலைய கமிஷனர் பதவிகூட மிக சாதாரணமாகத்தான் உள்ளது.
Advertisement
கேரளாவில் தேவஸ்வம் போர்டு சுயேட்சை ஸ்தாபனம். ஆந்திராவில் சமய, கல்வி ஸ்தாபனங்களின் நிதியை வேறு எந்த காரியத்துக்கும் திருப்பிவிட முடியாது. மடங்கள், டிரஸ்டுகள் ஆகிவற்றின் உடைமைகளை அவை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அக்காரியங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்று ஆந்திர சர்க்கார் கண்டிப்பான தாக்கீதுகளை பிறப்பித்திருக்கிறது.
சமஸ்கிருதத்தின் மீது துவேஷத்துக்கு காரணம் அதன் லிபியே அன்றி வேறல்ல. இதர மொழிகளைப் போல் அல்லாமல், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே இணைப்பு எதுவும் இல்லை. மேலும் முக்கியமான சமஸ்கிருத புராண, இதிகாசங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனவே சமஸ்கிருதம் கற்பது அவசியம் என்று கருதப்படாமல் இருக்கலாம்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஹிந்து மதத்தில் அக்கறை கொண்டிருக்கும்வரை இம் மதம் வளர்ச்சி அடையலாம். பள்ளிகளில் ஒழுக்க போதனைக்கான வகுப்புகளை ஹிந்து மதத்தை பற்றி விளக்கி போதிக்க பயன்படுத்தலாம்.