இந்த நாளில்...

17.12.1903: உலகின் முதல் விமானம் பறந்த நாள் இன்று!

113 ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் முதல் விமானம் அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் இன்றுதான் பறக்க வைக்கப்பட்டது.

DIN

113 ஆண்டுகளுக்கு முன்பாக உலகின் முதல் விமானம் அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் இன்றுதான் பறக்க வைக்கப்பட்டது.

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் ஆகிய இருவரும் அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள். இருவருமே அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்  மற்றும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகள் ஆவார்கள்.

இருவரும் சேர்ந்து வடிவமைத்த விமானமானது முதன்முதலில் வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் என்னும் பகுதியில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பறந்தது. சகோதரர்களில் ஓர்வில் ரைட் 12 குதிரைத் திறன் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் இணைக்கப்பட்ட விமானத்தில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் பறந்தார். மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்த அண்ட் விமானமானது வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்தது.

அதனைத் தொடர்ந்த 1904 மற்றும் 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் ஆரம்ப கட்ட விமான வடிவமனானது பல முறைகளில் சீர்திருத்தப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT