முகப்பு
இந்த நாளில்...

08.11.1895: எக்ஸ்ரே கதிர்  கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

நோயுற்றவர்களுக்கான எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவத்தில் எக்ஸ்ரே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.   

இந்த நாளில்...

08.11.1895: எக்ஸ்ரே கதிர்  கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

நோயுற்றவர்களுக்கான எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவத்தில் எக்ஸ்ரே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.   

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:15 PM
பகிர்:

நோயுற்றவர்களுக்கான எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவத்தில் எக்ஸ்ரே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.    நாம் எக்ஸ்ரே எடுப்பதின் மூலம், எலும்புகளில் ஏற்பட்ட முறிவு மற்றும் விரிசல்களைக் கண்டறிந்து அதற்கேற்ற சரியான சிகிச்சை அளிக்க முடிகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த எக்ஸ்ரேயை கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ராண்ட்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார். ஏற்கனவே எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் பண்புகள் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

1895ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அன்று ராண்ட்ஜன் பொருட்களில் எக்ஸ் கதிர்களின் ஊடுவருவல் பற்றி ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு ஈயத்தட்டை எக்ஸ் கதிர்களுக்கு முன்னர் அவர் பிடித்தபோது, அக்கதிர்கள் அவரது கையில் இருந்த ஈயத்தட்டின் உருவத்தை மட்டும் அல்லாமல் அவரின் கட்டை விரலின் படிமத்தையும் படம் பிடித்திருந்தது.

அவரது கைவிரல் எலும்புகளின் படங்கள் அவற்றின் நிகழ்களை விடக் கருமையாகக் காட்சியளித்தன. இதன் மூலம் ஒளியினால் ஊடுருவமுடியாத பொருட்களையும் எக்ஸ் கதிர் ஊடுருவிச் செல்லும் என்பதை ராண்ட்ஜன் கண்டுபிடித்து வெளியிட்டார்.

இவரின் கண்டுபிடிப்பை பயன்படுத்தி ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு மருத்துவத் துறையில் எக்ஸ் கதிர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்காக ராண்ட்ஜெண்ணுக்கு 1901ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →