ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் ஏழ்மை ஒழிப்பு என்பதில் தென்னை பயிர் ஆற்றிய பணிகளை நாம் நினைவுகூர முடியும். ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் குழுமம் என்னும் அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
இந்த அமைப்பின் தலைமையகம் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் உள்ளது. இந்த அமைப்பின் உருவாக்க தினமும் செப்டம்பர் 2-ஆம் தேதி அன்றே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தென்னை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இந்த குழுமத்தில் உறுப்பு நாடாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.