ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் 1968-ல் உளவுத் துறையின் ஓர் அங்கமாக, வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவான ‘ரா’ (ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங்) தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட், 250 பணியாளர்கள் என தொடங்கப்பட்ட 'ரா'-வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய். அதிகாரபூர்வமாக மட்டுமே 25,000 பேர் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் 3,500 பேர் அந்நிய மண்ணில் பணியாற்றும் கள உளவாளிகள்.
இது போல் அதிகாரபூர்வமாக இல்லாமல் எத்தனையோ பேர் வேலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.