இந்த நாளில்...

31.03.1889: உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் திறக்கப்பட்ட தினம் இன்று!

பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழா ...

DIN

பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழா பாரிசில் நடைபெற்ற பொழுது, நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று. பின்னர் மே 6 அன்று பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனை உருவாக்க 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி ஆண்டெனாவைச் சேர்க்காது 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன் எடையும் உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவாக இருந்ததது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடிய வகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காது என்று கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

SCROLL FOR NEXT