உலகெங்கும் பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதமான பணியினை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.