முகப்பு
கண்ணோட்டம்

"ஒüவை என்றால் அன்னை!'

ன்னை கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்த "ஆத்திச்சூடி' தொடர் சொற்பொழிவின் முதல் சொற்பொழிவாக, "அறம் செய விரும்பு' என்ற தலைப்பில் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் சென்ற சனிக்கிழமை, மைலாப்பூர் பாரதிய

Updated On : 20 செப்டம்பர் 2012, 9:16 pm IST
பகிர்:

ன்னை கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்த "ஆத்திச்சூடி' தொடர் சொற்பொழிவின் முதல் சொற்பொழிவாக, "அறம் செய விரும்பு' என்ற தலைப்பில் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் சென்ற சனிக்கிழமை, மைலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் உரையாற்றினார். ஒüவையின் பெருமையை எடுத்துரைத்த சொற்பொழிவில் கிடைத்த அரிய கருத்துகளின் தொகுப்பு:

 ""ஒüவை என்பதற்கு "அன்னை' என்று பொருள். ஒüவையைப் "பாட்டி' எனப் பலர் அழைக்கிறார்கள். ஆனால் ஒüவை ஒன்றும் கிழவியில்லை. நல்ல அழகான இளமை உருவம் கொண்டவராகக்கூட இருக்கலாம்.

 ஏழு ஒüவையார்களும் வேறுவேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களாயினும் "ஆத்திச்சூடி' இயற்றிய ஒüவையார் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரெனத் தெரிகிறது. 1906-ஆம் ஆண்டில் விநாயகம்பிள்ளை என்பவரே முதல் முதலாக ஒüவையாரின் முறையான வரலாற்றைப் படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

 16-ம் நூற்றாண்டிலேதான் முதன்முதலாக ஐரோப்பியர்களால் சென்னையில் ஆரம்பப் பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுத்தரப்பட்டது. ஆங்கிலத்தில் ஆரம்பப் பாடப் புத்தகங்கள் இருந்ததுபோல், தமிழில் பாடத்திட்டமாக ஒüவையின் "ஆத்திச்சூடி"யை வைத்திருந்தார்கள் என்பது சரித்திரச் சான்று. "கான மயிலாட' என்ற ஒüவையின் மூதுரைப் பாடலில் "வான்கோழியை'ப் பற்றிய குறிப்பு வருகிறது. வான்கோழி ஐரோப்பியர் காலத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சான்றுகளே, "ஆத்திச்சூடி' ஒüவையின் காலம் 16-ம் நூற்றாண்டு என்பதை நிரூபிக்கிறது.

 வலிமையில்லாதோர், வடக்கிருந்தோர், முதியோர், நோயாளிகள், அகதிகள் மற்றும் நலிந்தோர்களுக்கு ஈதலே சாலச் சிறந்ததாகும். தண்ணீர்ப் பந்தல் வைத்தல், மரம் நடுதல், பசியாற அன்னம் இடுதல், களைப்பாற வீட்டில் இடம் தருதல், சாலைகள் பழுதுபார்த்தல் போன்ற செயல்களே நல்ல அறச் செயல்களாகும். அறங்களிலேயே மிக உயர்ந்ததாக எல்லா இலக்கியங்களும் போற்றுவது பசிப்பிணியைத் தீர்ப்பதுதான்.

 ஒüவையாரின் ஆத்திச்சூடிதான் தமிழின் முதல் குழந்தை இலக்கியம். ஒüவையார் நிறைய தனிப் பாடல்களையும் இயற்றி தன் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாகக் கோர்த்துள்ளார்.

 அதியமான் நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல், ஒüவையிடம் கொடுத்தார். அதியமான், தான் நீண்டகாலம் வாழ்ந்தால் பல போர்களங் கண்டு, பலரையும் மாள்வதைத்தான் காணமுடியும், ஆனால், ஒüவை நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் வாழ்ந்தால், தமிழில் பல அறநூல்கள் இயற்றித் தமிழுக்குத் தொண்டு செய்யமுடியும் என்ற நல்லெண்ணத்தோடுதான் இதை செய்தார்'' என்று கூறி, இந்த உயர்ந்த எண்ணத்தினாலேயே ஒüவையின் பெயர் உலகில் உள்ளளவும், கூடவே, அதியமானின் பெயரும் நிலைத்து நிற்கும் என்று கூறியதை எல்லோரும் ரசித்தனர்.

 சொற்பொழிவில் ஒüவை பசியோடு வாடிய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, "பத்தும் பசி வந்திடப் பறந்து போம்' என்ற ஒüவையின் நல்வழிப் பாடல் வரிகளோடு ஏற்றார்போல், மகாகவி பாரதியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ரசமாக வர்ணித்தார்.

 ""ஒரு நாள் பாரதிக்கு கோபம் வந்துவிட்டது. தான் வீட்டில் சாப்பிடப் போவதில்லை என்று மனைவி செல்லம்மாவிடம் கூறிவிட்டு வெளியே போய்விட்டார். பாரதியின் குணத்தை நன்கு அறிந்திருந்த செல்லம்மா, வீட்டில் மீதமிருந்த பாரதிக்குப் பிடித்த பண்டமான பணியாரத்தை, வேலை ஆள் மூலம், அவர் ரயில்நிலையத்துக்குச் சென்றிருப்பார் எனப் புரிந்துகொண்டு, அங்கே கொடுத்தனுப்பினார். அந்தச் சமயத்திலே பாரதியை சந்திக்க வந்த பாரதிதாசனோடு, பாரதியைச் சமாதானப்படுத்தி அழைத்து வர செல்லம்மா சென்றார். பசியில் துடித்துக் கொண்டிருந்த பாரதி, செல்லம்மா கொடுத்தனுப்பியிருந்த பண்டத்தை உண்டு, தன் கோபத்தையெல்லாம் மறந்தவராக, ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு, ரிக்ஷாக்காரரைப் பார்த்து "சாரதி, ஓட்டடாரதத்தை, ஆஹா, தேவாம்ருதம் கிடைத்தது' என்று கூறினார்'' என்பதை ரசனையோடு விளக்கினார்.

 ஒüவையின் வரிகளை, எளிமையான, தெளிவான விளக்கங்களோடு, நிரம்பியிருந்த அரங்கத்தில் கூடியிருந்தோரின் செவிகளுக்கு விருந்து படைத்து, ஒüவையின் பெருமைகளை எல்லோரையும் அறியச் செய்தார் சாரதா நம்பி ஆரூரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.