கண்ணோட்டம்

ஸ்ரீநகரில் மடத்திற்கான முயற்சி

அமர்நாத்திலிருந்து வந்த சுவாமிஜி செப்டம்பர் இறுதி வரை ஸ்ரீநகரில் தங்கினார். காஷ்மீர் மன்னரின் ஏற்பாட்டின் படி அவர் மிகச் சிறப்பாக உபசரிக்கப்பட்டார்.

தினமணி

அமர்நாத்திலிருந்து வந்த சுவாமிஜி செப்டம்பர் இறுதி வரை ஸ்ரீநகரில் தங்கினார். காஷ்மீர் மன்னரின் ஏற்பாட்டின் படி அவர் மிகச் சிறப்பாக உபசரிக்கப்பட்டார். முன்பு ஒருமுறை காஷ்மீர் மன்னர் அவரிடம் கல்விப் பணிக்கான தாம் நிலம் அளிப்பதாகவும், வேண்டிய நிலத்தை சுவாமிஜி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். அதன்படி சுவாமிஜி ஓர் அழகிய நதிக்கரையில் நிலத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே ஒரு பெண்கள் மடம் சம்ஸ்கிருதக் கல்லூரி ஆகியவை நிறுவ வேண்டும் என்றும் நினைத்திருந்தார்.

அமர்நாத்திலிருந்து திரும்பி வந்த சுவாமிஜி எப்போதும் தியான நிலையிலேயே இருந்தார். இந்த நிலை அவருடன் இருந்த பெண்களையும் பற்றிக் கொண்டது. அவர்களும் ஆழ்ந்த தியான வாழ்வில் ஈடுபட விழைந்தனர். இதனைக் கேட்ட சுவாமிஜி மகிழ்ந்தார். 'மடத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நீங்கள் கூடாரங்கள் அமைத்து, அங்கே தனிமை வாழ்வில் ஈடுபடுங்கள். ஒரு புதிய நிலத்தில் முதன்முதலாகப் பெண்களின் காலடிபடுவது ஐஸ்வரியத்தை வளர்க்கும் என்பார்கள். எனவே நிங்கள் அங்கே சென்று பெண்கள் மடத்திற்கான ஓர் ஆரம்ப அடியை எடுத்து வையுங்கள்' என்றார்.

ஆனால் இறைவனின் திருவுள்ளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை. காஷ்மீரின்ஆங்கிலேயப் பிரதிநிதியான ரெஸிடன்ட் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டு முறை முயற்சி செய்தும் அவர் மறுத்துவிட்டார். சுவாமிஜிக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதனை இறைவனின் திருவுளமாக ஏற்றுக் கொண்டு கல்விப்பணிக்கு உகந்த இடம் கல்கத்தாவாகத்தான் இருக்கும் என்று தெளிந்தார் அவர்.

அதுபோலவே இமயமலைப் பகுதியில் தியான வாழ்விற்கென்றே ஒரு மடம் அமைய வேண்டும் என்று சுவாமிஜியின் விருப்பமும் அதுவரை நிலைவேறாமலேயே இருந்தது. ஆனால் குமாவூன் பகுதிகளில் அதற்கான இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதாக சேவியர் தம்பதிகள் தெரிவித்தனர். அது சற்று ஆறுதலை அளிப்பதாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT