கண்ணோட்டம்

மடத்தை நிறுவுகிறார்

1898 டிசம்பர் 9, வெள்ளி. அன்று சுவாமிஜியின் வாழ்விலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றிலும் ஒரு பொன்னாள் அன்றுதான் சுவாமிஜி......

தினமணி

1898 டிசம்பர் 9, வெள்ளி. அன்று சுவாமிஜியின் வாழ்விலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றிலும் ஒரு பொன்னாள் அன்றுதான் சுவாமிஜி பேலூர் மடத்தில் குருதேவரை எழுந்தருளச் செய்தார் சகோதரத் துறவிகள் மற்றும் சீடர்களின் உதவியுடன் எல்லா கிரியைகளையும் அவரே செய்தார். காலையில் கங்கையில் குளித்து, புதிய காவியுடை உடுத்தி, பூஜையறைக்குச் சென்று பூஜாரியின் இருக்கையில் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதச் சாம்பல் இருந்த கலசத்தை மிகுந்த பக்தியுடன் பூக்களால் வழிபட்டார். அதன்பிறகு கங்கைக்கரை வழியாக ஊர்வலம் புறப்பட்டதுக. ஒரு செப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த  ஸ்ரீகிருஷ்ணரின் புனித அஸ்தியை சுவாமிஜி தாமே தமது வலது தோளில் தாங்கியபடி முன்னால் சென்றார்.

சரத்துடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டே சென்ற சுவாமிஜி இறுதியான, 'நமது மடம் மதப் பிரிவுகள் அனைத்தையும், கொள்கைகள் அனைத்தையும் சமரசப்படுத்தி நிற்கும். ஸ்ரீராமகிருஷ்ணர் பரந்த கொள்ளையைக் கொண்டிருந்தது போலவே இந்த மடமும் அத்தகைய பரந்த கொள்கையின் மையமாக விளங்கும். இங்கிருந்து எழுந்து பரவும் சமரசப் பேரொளி வெள்ளம் உலகனைத்தையும் நிறைக்கும் என்றார்.

எல்லோரும் மடத்தை அடைந்தார்கள். சுவாமிஜி தமது தோளில் இருந்து அஸ்திப் பெட்டியை இறக்கித் தரைமீது விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் வைத்து, அதன்முன் நெற்றி தரையில் படும்படி விழுந்து வணங்கினார். மற்றவர்களும் அதுபோலவே வணங்கினார்கள். பிறகு சுவாமிஜி அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ண பூஜை செய்தார். பூஜையை முடித்துவிட்டு ஹோமம் செய்தார். சகோதரச் சீடர்களின் துணையோடு தாமே பாயசம் செய்து ஸ்ரீராம கிருஷ்ணருக்குப் படைத்தார்.

இந்தச் சடங்குகள் முடிந்த பிறகு சுவாமிஜி அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து, இந்த யுகத்தின் மகத்தான அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் பலரது நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் இன்றிலிருந்து இந்தப் புனிதமான தீர்த்தத்தலத்தில் பல காலம் வாழ்ந்து, இந்த இடத்தை இணையற்றதொரு சர்வசமய சமரச் மையமாக ஆக்கும்படி இதயபூர்வமாகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். எல்லோரும் அவர் கூறியபடியே கைகளைக் குவித்துப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் நிழ்ச்சி நிறைவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT