எல்லைக் கோடு: ரீகன். ஜெயக்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:40 PM
உலகத்தின் மீது
எல்லைகோடுகள்
நாடுகளாகியது!
நாட்டின் மீது அதுவிழ
மாநிலங்களானது..!
காவல் நிலையம் முதல்
தொகுதிவரை எல்லை கோடுகள்!
வானையும் காற்றையும்
நிலத்தடி நீரையும்
எந்த எல்லைகோடு பிரிக்கும்?