எதிர்கால கனவு: எஸ். சுரேஷ்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
நாளை என்பது நம்பிக்கை
எதிர்கால கனவு தன்னம்பிக்கை
கற்பனை என்றாலும் வாழ்வின்
அடித்தளம் எதிர்கால கனவே!
நாளெல்லாம் உழைத்து உழைத்து
வெந்ததை தின்று விதியின்
வழியில் வாழ்வோரின் கனவு
ஊமை கண்ட கனவாகும்!
நாளெல்லாம் எதிர்கால கனவை
சிந்தித்து உணர்ந்து செயல்பட்டால்
வளர்பிறை போல் அவனுடைய
எதிர்கால கனவு நிறைவேறும்!
புத்தனுக்கும் இருந்து இருக்கும்
எதிர்கால கனவு - மக்கள்
துன்பத்திற்கு காரணமான ஆசையை
விட்டுவிட வேண்டு மென்று!
இன்றைய உலகின் வளர்ச்சி
நேற்றை எதிர்கால கனவு !
எதிர்கால கனவு காணுங்கள்
நாளைய உ(ங்களின்)லகின் வளர்ச்சிக்காக!