கவிதைமணி

வேலிதாண்டிய காற்று: ப. தாணப்பன்

கவிதைமணி

தாகசாந்திக்குத் தண்ணீர்...
பட்டினிக்குப் பிடி சோறு...
உயிர்ப்பித்திட வருவாயென மாமழையே...
வேண்டிக் கொண்டதன் தவறென்ன?
தென்றலாய் வருடிச்செல்லும் நீ
ஆர்ப்பரித்த புயலாய் வன்கோபம் பூண்டது ஏனோ?

தூர்த்தெடுத்த நிலங்கள்...
மலடியாக்கிய நெகிழிகள்....
மூழ்கடிக்கப்பட்டப் போக்குப்பாதைகள் ....
எத்தனை எத்தனைப் பிழைகள் ..!

இடைவிடாது பெய்து 
"நீரால் "
இழப்பை உணர்த்தி மீண்டெழும் முன்
காற்றாய் கவிழ்த்ததேன்?
மூச்சைத்தரும் தருமமே!

மூர்ச்சையாக்கினது போதுமே!
வேலிக்குள் பூட்டவியலா காற்றே!
பொறுமையாய் தவழ்ந்து 
தென்றல் தா!
மீண்டெழ மென் சுவாசம் தா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT