பட்டாசு சத்தம்: சசி எழில்மணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
புன்னகைக்கும் மத்தாப்பும்
கண்ணீரை நமக்களிக்கும்
வெடிக்கின்ற பட்டாசும்
வலிகளை விட்டுச் செல்லும்
சிறகு விரித்த பறவைகளும்
சுற்றித்திரியும் விலங்கினமும்
Advertisement
சப்தம் கேட்டு படபடக்கும்
செய்வதறியாது ஆர்ப்பரிக்கும்
சிலநேர மகிழ்ச்சிக்காக
காசும் கரியாகும்
கவனம் சிதறிப்போக
கவலைகள் பெருகிப்போகும்
சுழன்று வீசும் தென்றலும்
மாசு பட்டுப் போய்விடும்
பட்டாசு சத்தம்
சிலருக்கு மகிழ்வெனினும்
சிந்தித்துப் பார்த்தால்
உண்மைகள் விளங்கிடும்