முகப்பு
கவிதைமணி

பட்டாசு சத்தம்: பொன்.இராம்

Updated On : 1 நவம்பர், 2016 at 3:37 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM

ஆறு வயது உற்சாகத்தில்
ஆயிரம் சரவெடிகள்
ஆகாயத் தாய் செவி
பொத்தும் அளவில்;

வெடித்த கைகள்
இன்று வெண்டைப்
பிஞ்சுவிரல்களின் வாழ்க்கை
பட்டாசுத் சத்தத்தில் தொலைந்து
போனதறிந்து சுயநல மாந்தரின்
மனமாற்றம் காண
ஆவலாய் காத்திருக்கிறாள்!

பட்டாசுச் சத்தத்தில் பதுங்கிய
பசுங்கிளிகள் சலசலத்து
பயந்த அரசமர இலைகளுடன்
தஞ்சம்!

தன்னலமில்லா மரங்கள்
போதிக்கும் வாழ்க்கைத்தத்துவம்
காண உயிர் காக்கும்
தூய காற்று உலகம் காண

Advertisement

பட்டாசு சத்தமில்லா
புது உலகம் காண
இளைஞர் சமுதாயம் படைக்க
யார் வருவார் கை கொடுக்க?

மின்னி மறையும்
மானிட வாழ்க்கையில்
மண்ணுக்காகப் போராடும்
துப்பாக்கிப் பட்டாசுச் சத்தம்
தொலையும்நாள் காண இளைஞர்
சமுதாயம் திரளாதோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.