வழி தவறிய பயணங்கள் : ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
என் வழி தனி வழி என எவரும்
தனியே பயணிக்க முடியாது.
தடைகளாலும், தடங்கல்களாலும்
பயணங்கள் வழி தவறலாம்.
பயணிக்கும் வழியில் நேசக் கரம்
நீட்டுவோர், அகம் அறிந்து நட்பு
கொள்வதால் வழியெங்கும் வெளிச்சக்
கீற்றுகள் வெள்ளமாய்ப் பாயலாம்.
பொய்யுரைத்து பொறாமை கொள்வோர், கொடியோர்
நட்பால் வழி தவறும் பயணங்கள் கேடாய் முடியும்.
ஆன்றோர், சான்றோர் அறிவிற் சிறந்தோர் நட்பால்
வழி தவறா பயணங்கள் நன்மைகளால் நிரம்பும்.
என் வழி தனி வழி இதில் என் பயணம்
இனிதாய் முடியும் என்று மனிதன் நினைப்பதை
இறைவன் விதித்தது மாற்றுவதால் வழி தவறிய
Advertisement
பயணங்களால் வாழ்வின் திசையும் மாறிப் போகிறது.