கவிதைமணி

புதையல்: -ரெத்தின.ஆத்மநாதன்,

கவிதைமணி

புதைத்து  வைக்கும்  எதுவும் 
'புதையல்' என்ற  பெயர் பெறும்!
சந்ததியினர் சந்தோஷமுடன் வாழ
பொன்னையும் ...பொருளையும்...
புதைத்து வைத்தனர் முன்னோர்...
-நாளும் நல்ல எண்ணத்துடன்!

புதையல் தேடி அலையாமல்
புதுவுலகம் படைக்கலாம் என
இளைய தலைமுறை வெகுண்டெழ...
எங்கோ...எப்பொழுதோ...எதற்கோ...
தோண்டிய இடங்களில் தலைகாட்டுகிறது
-புதையல்!செப்புத் தோண்டிகளில்!

கணவனுக்குப் புதையலாய் மனைவியும்...
மனைவிக்குப் புதையலாய் கணவனும்...
இருவருக்கும் புதையலாய் இரு மழலைகளும்...
இவ்வுலகில் அமைந்திட்டால் போதுமே!

புதையலும் வேண்டாம்!புகழ்ச்சியும் வேண்டாம்....
உலகமே சொர்க்கமாய் இலங்கி ஒளிவிடுமே!
பூதம் காத்த புதையல் கதைகளும்...
பாம்புகள் காத்த வரலாறுகளும்...
ஏகமாய் இங்கு வலம் வந்ததுண்டு!

-உழைப்பையே இங்கு புதையலென்று...
உறுதியாய்ச் சொன்ன தலைவர்கள் தம்மால்
கதைகளெல்லாம் கானல் நீராயிற்று!

எட்டாம்தேதி இரவு தன்னில்...
ஐநூறும்...ஆயிரமும் காலாவதியானதால்...
புதிய    ஐநூறு...  ஆயிரத்தை...
வறியவன்  கண்ட  புதையலைப்போல...
காணத் துடித்தே காத்துக் கிடக்கின்றனர்...
-இந்திய நாட்டின் பெருவாரி மக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT