மனம் எனும் மாயப்பேய்: ச. பிரசன்னா
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
நினைத்ததையெல்லாம்நடக்க வேண்டும் ‘நடப்பதையோ , நினைக்கமறுக்கும் .மறக்க வேண்டியதைமறுத்து நினைக்கும் ;முறிந்து போனதைமறக்காது தவிக்கும் .கிடைத்தவற்றிலேஆனந்தமின்றியிருக்கும் ;கிடைக்க முடியாததில்ஆவல் அள்ளிக் கொட்டும் .தனித்த வேளையில்ஏங்கித் தவிக்கும் ;கும்பலிருக்கையில்தனிமை தேடும் .பசித்த வேளையில்புசிக்காதிருக்கும் ;உணவில்லா நேரத்தில்பசியென்றழைக்கும் .எந்த வேளையில்என்ன நினைக்கும் ,எந்த தருணத்தில்என்ன நடத்தும்என்பதுஆண்டவனும்அறியான் ;அறிய விழையான் ;ஏனெனில் .மனமெனஒன்றிருந்தால்ஆண்டவன்முதல்ஆண்டிவரைஒரேயோர் உருவம்தான் ..!அதுவேமனம் எனும் மாயப்பேய் !