கவிதைமணி
மனம் எனும் மாயப் பேய்: ஜெ.முத்துலெட்சுமி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
சாதித்தவைகளை மறந்தாலும்
பாதித்தவைகளை மறப்பதில்லை மனம்..!
மனம் ஒரு கண்ணாடி போன்றது
அதை அப்படியே பார்ப்பதும்,
உடைத்து பார்ப்பதும் நாம்
பழகும் விதத்திலும் நம்
மனதிற்கு பிடித்தவர் கையிலுமே
உள்ளது
உன் மனம் ஒன்றே
உன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம்
அது தெளிவாக இருக்கும்
வரையில்
நீ ஒருவராலும்
வீழ்த்தப்படுவதில்லை...!