முகப்பு
கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்:  பா. சத்தியமோகன்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 6:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

நெல்லுக்கு இறைத்த நீர்
ஆங்கே புல்லுக்கும்
பொசியுமாம்” என்பது 
தமிழ்த்தாய் ஒளவை  வாக்கு ; ஆம்!

பெரியநலன் கருதி செய்யும் செயல்
நலன்
எளியவர்களுக்கும் கிடைக்கும்
என்பதாம்;
தானே எல்லா  நீரையும்
குடித்துவிடாமல்
புல்லின் மீதும் கருணை
காட்டுகிறது நெல்பயிர்
என்பதாம்;
டம்பளர் அளவு நீர் வேணுமெனில்
கிணற்றில் டம்பளர் கட்டி
இழுப்பதில்லை
வாளி கட்டித்தான்
இறைக்கின்றோம் என்பதாம்;
தேங்காய் அளவு நன்மை
செய்தால்தான்
எலுமிச்சை அளவாவது போய்ச்
சேரும் என்பதாம்;
ஆதலினால் 
பெண் இனத்திற்கு ஆண் செய்யும்
சிறிய நன்மை எவை எவை என ஆராய்ந்து
அவற்றையெல்லாம் பெரிது பெரிதாக
மாற்றும் குணம் பெறுவோம்
அதன்பின்பு 
எதுவுமே விழலுக்கு இறைத்த
நீராகாது
சமூக வெற்றிக்கு விதைத்த
விதையென்றே ஆகுமாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.