முகப்பு
கவிதைமணி

நெல்லுக் கிறைத்தநீர்: க.இராபர்ட்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 6:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும்ஆங்கே பொசியும்
 
இங்கு
 
நடந்தே வர வேண்டிய
காவேரி , காலொடிந்து
போனதால்
புல்லோடு சேர்ந்தே
நெல்லும் கருகும் ...
 
வான் மழை போற்றி
வாழ்ந்த எம்தமிழர்
நீர் மேலாண்மையில்
நிறைவு பெறாமையால்
வாய்க்கால் வழியோடி
நெல்லுக்குப் பாயும்நீர்
ஆழியில் கலந்தே
ஆயுளை முடிக்கும்
 
இன்னும்...  இன்னும் ...
 
நெல்லுக்கு இறைக்க
நீர் வரும் பாதையை
பார்த்து பார்த்தே
பூத்த கண்ணனாய் ...
 
சோறுடைத்த சோழ நாட்டு
விவசாயி...  இன்று ,
மாரடைத்தே  சாகின்றார் ...
 
வழி வாசல் திறந்தே
காவிரி வரும்
காலம் நோக்கியே
நெல்லும் .... புல்லும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.