முகப்பு
கவிதைமணி

நெல்லுக் கிறைத்தநீர்: கே. அசோகன்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 6:02 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

நதிவழியே  நடந்தே வந்து
நாற்றங்கால் தவழ் வதற்கே
புதிதாய் பாய்ந்து வந்தாய்!
புத்துணர்வாய் நாற்றங் காலும்
சுதிமீட்டும் யாழினை போல
சுழன்றாடி காற்றிலே நடனமிட்டு
நதிநீரின் தழுவலுக்கு நயமாய்
நாளும் நன்றிதனை நவின்றனவே
சுந்தரதமிழில் சொல் விதைத்தே
சுவைபடவே அடுக்கி வைத்து
ந ந்தவன காற்றைப்  போல
நயமாய் மேடைதனில் பேசிடுவர்!
வெந்த்தைத் தின்பதற்கே வேகாத
வெயிலில் வாடுகின்ற உழவர்கள்
கந்தையை உடுத்திக் கொண்டு
கண்களால் வானத்தைப் பார்த்தே
கண்டிடுமோ நெல்லுக்கிறைக்க நீரென
பசுமையை மறந்து வைத்தோம்
பகலவனை கொதிக்க வைத்தோம்
கொசுவினை  வரவேற்றே தான்
கொள்ளை நோயை கொண்டிட்டோம்
பசும்புற்களை  நசுக்கியே விட்டு
பல-மனைகள் ஆக்கி வைத்தோம்!
விசும்பித்தான் புலம்பி நின்றே
வான்மழைக்கு ஏங்கி நின்றோம்
கொடிகளை களைந்தே விட்டு
கட்சிக்கொடிகள் ஏற்றி விட்டோம்
விடியலில் எழுந்தே விடாமல்
விழிப்புடனே போர்வை போர்த்தி
வக்கணையாய் உறங்கி விட்டு
எழுகதிரும் உச்சியில் நிற்கையில்
எழுந்தேதான் நெல்லுக்கு இறைத்திட
நீரினைத் தேடியே நிற்கலாமோ !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.