என் ஓட்டம் என் இலக்கு: செல்வா
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
நாளும் காண பல நாட்டம்
நன்றாக ஓடுது என் ஓட்டம்
நாளோடு மாறுது அதன் திட்டம்
பகலிலும் என்கையில் விளக்கு
பட்டும் படாது என் இலக்குபாட்டில்
வராத ஒரு கணக்கு
ஆசைகள் ஆடுது அன்றாடம்
அறிஞ்ச பின்னும் என் ஓட்டம்
முடிச்சூட்டும் நல்ல மகுடம்
Advertisement
காலத்தோடு மாறும் நோக்கு
கணக்கில் கொள்ளும் என் இலக்கு
சிந்தையில் உண்டு கொஞ்சம் செருக்கு
வஞ்சனை யில்லாமல் வரும் வாட்டம்
வந்தாலும் நிற்காது என் ஓட்டம்
வாசனை வீசும் நல்ல பூந்தோட்டம்
பின்னிப் பிணைந்த பிணக்கு
பின்னால் செல்லா என் இலக்கு
மாறாது மணக்கும் அதன் வாக்கு
வாழ்க்கையே ஒரு பெரிய வட்டம்
வாழத்தான் ஓடுது என் ஓட்டம்
வலிமை நிறைந்த அதன் திட்டம்
இருப்புக் கொள்ள வேண்டும் வழக்கு
இன்னா செய்யாது என் இலக்கு
இனிதே வாழ்வை நன்கு இயக்கு