முகப்பு
கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு: கே. அசோகன்

Updated On : 12 செப்டம்பர், 2016 at 4:39 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM

அறியாத அகவை ஐந்து வரை
அறியவே  யில்லை என்இலக்கு!
தெறிக்கும் புன்னகை பரிசாக்கி
தெய்வங்க ளிணை  யானேன்!

பறிக்க வொண்ணா அரும்புகளாய்
பளிச்சென்ற முகத்தைக் காட்டி
பரவச மாக்கியே காண்போரை
பறக்கவும் செய்தேன் வானிலே!

அகவை ஆறென ஆனபின்னே
அங்கே யிங்கே ஓடலானேன்!
முகத்தில் கொஞ்சம் சினம்சேர
முணுமுணுப்பு உடன் குடியமர
விகற்பமும் அணியாய் வகுத்திட
விளையாட போட்டி போட்டேன்!

வெற்றியே இலக்கு மென்றேன்!
விடாப்பிடி குணமும் கொண்டேன்!
வயதோ பதினாறு ஆனபின்னே
வாலிபத்தின் வாசலில் நின்றே
வயதின் வேலையைக் காட்ட
வனிதையர் பின்னால் சென்றே

மோகமும்  கொள்ள லானேன்
மோகமெது காதலெது புரியாது
அயற்சியாய் மலைத்தே நின்று
அவதியை  தேடிக் கொண்டேன்!

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.