கடவுள் ஒருநாள்
கண் குளிர
மண்மகளுக்களித்த
சீதனப் பச்சை நிலம்
பார்க்கத்தான் ஆசைப்பட்டு
வானவில் மிதந்து
புவிமகளைக் காண
வந்தாராம்!
சீதனம் கொடுத்த
பச்சைநிலமெங்கே
என்றே கேட்டாராம்!
கான்கிரீட் புருஷன்
உண்ட மயக்கத்தில்
பச்சைநிலம்
போனதெங்கே தெரியாது
என்ற பதில் கேட்டு
கோபப்பட்ட கடவுளுமே
புவிமகள் கணவனிடம்
குறை கேட்கச் சென்றாராம்!
வானவில் விமானமோ
குளிர்ந்த காற்று
வீச மரங்கள்
தொலைந்த பாதையில்
இயங்குவது எப்படி
என்றே கேட்டாராம்!
அலுத்துப் போன
கடவுளுமே நடந்தே
கான்கிரீட் பாதையிலே
சென்றாராம்!
காலை வருத்திய
சூரிய சித்தப்பனோ
பசுமை நிலம்
வருத்தம் தெரியா
உறவுகளுக்காக
இன்னமும் ஏன் மனக்கவலை!
என்றே கேட்டாராம்!
சட்டங்களை வளைத்து
வாழும் பதர்களுக்காக
நல்ல மானிடரை இழக்கலாமோ!
விழிப்புணர்வை நாம்
உருவாக்க இன்னமும்
ஏன் தயக்கம்
என்றே கேட்டாராம்!
நல்லவர் கெட்டவர்
நிறைந்த உலகில்
மரமோ மழையோ
இவர்களுக்கு என
தனது கடமையைச்
செய்யவில்லையே!
புவிமகள் பசுமைநிலம்
காக்க என் செய்வாள் பாவம்
என்றே பதில் உரைத்தார்
பொல்லா உலகில்
பசுமைநிலம் காக்க
வீட்டிற்கொரு மரம்
வளர்ப்போம் என்ற
சட்டம் இயற்ற
வழி செய்வோம்!
நீர்வளம் காக்க
கடவுள் நானே
ஆணையிடுவேன்
என்றே அனல் பறக்க
உரைத்திட்டார்!
புவிமகள் கண்ணில்
நீர் கோர்க்க
பொல்லா அரசியல்
வட்டத்தில்
உங்களையும் ஒருநாள்
போட்டுத் தள்ள
போராளிகள் வரலாம்!
கலக்கல் பதிலால்
அதிர்ந்த கடவுளுமே
கலியுகம் காக்க
புறப்பட்டாரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.