கவிதைமணி

சூரிய தாகம்:  கவிஞர் டி.கே.ஹரிஹரன்

கவிதைமணி

சூரிய தாகம் தாமரைக் கேங்கும்
தாமரை தாகம் தண்ணீர்க் கேங்கும்
தண்ணீர் தாகம் குளத்திற் கேங்கும்
குளத்தின் தாகம் மரத்திற் கேங்கும்
மரத்தின் தாகம் மழைக்கே ஏங்கும்
மழையின் தாகம் மேகத்திற் கேங்கும்
மேகத்தின் தாகம் கடலுக் கேங்கும்
கடலின் தாகம் நதிக்கென ஏங்கும்
நதியின் தாகம் மலைக்கென ஏங்கும்
மலையின் தாகம் மழைநீர்க் கேங்கும்
மழைநீர் தாகம் மனிதரின் செயலால்
தணியாத் தாகமாய் தணலெரி கதிரவன்
அணியாய் மாறி நிலமது வெடிப்புற
நீர்நிலை சுருக்கி பயிரதைக் கருக்கி
வேரடி நீரும் உறிஞ்சிடும் வண்ணம்
பாரதை விழுங்கும் சூரியத் தாகம்!             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT