கவிதைமணி

சூரிய தாகம்! திருமதி மங்களாத்மா

கவிதைமணி

தாகச் சூரியனே!
மறந்தும் நீ...
தமிழகப் பக்கம்
தலைகாட்டி விடாதே!

தமிழகப் பெண்கள்...
தண்ணீர் தேடியும்...
மதுவை மறுத்தும்...
சாலை கேட்டும்...
போராடிப் போராடி...
கோபத்தின் உச்சத்தில்
கொதித்துப் போயுள்ளார்கள்!

சூரியனே!
அவர்கள் பார்வை 
உன்மீது பட்டால்...
உன் சாம்பல்கூட மிஞ்சாது!

பஸ்பமாகி நீ...
இருந்த இடந் தெரியாமல்
இழப்பாய் உன்னையே!

அதிமுக அமைச்சர்கள்...
எம்.எல்.ஏ.,க்கள் போல்
ஒளிந்து திரிவதே...
உனக்கு இப்போது நல்லது!

தாகம் மோகமென்று 
தலை காட்டினால் நீ...
கஷ்டப் படுவாய்!
கதிரவனே உஷார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT