சூரியனே!
இப் புவியின் நாயகனே!
உனக்குத் தான் ஏன்
இவ்வளவு தாகம்?
ஓ!
அரசியல்வாதிகளும்...
அதிகாரிகளும்...
நீதி...நேர்மை...
மறந்ததால்தான்...
உன் தாகம்
எல்லை மீறிப் போனதோ?
எங்கள் இதய நாயகனே!
உன் தாகத்திற்கு நீ...
ஏரிகள்...
ஆறுகள்...
குளங்கள்...
குட்டைகள்...
என்று எல்லா நீர்நிலைகளையும்
முழுதாய் உறிஞ்சி விட்டாய்!
பூமியில் இப்பொழுது...
புல்...பூண்டுகள் முதல்...
ஊர்வன...நடப்பன...
ஓடுவன...பறப்பன...
அத்தனையும் நீருக்கு
ஆலாய்ப் பறக்கின்றன!
எங்கள்...
அரசியல்வாதிகள்...
அதிகாரிகள் ...
போல் அல்லாது...
நீயாவது மனமிறங்கு!
உடனடியாக...
மழையை அனுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.