கவிதைமணி

சூரிய தாகம்: வெ.ராம்குமார்

கவிதைமணி

தாகத்திற்குமோர்
எல்லை உண்டு.,இங்கே
ஆட்சியாளர்களும்
சூரியதாகம் கொண்டவர்களே!

அவர்களுக்கு பணம் மட்டுமின்றி
நீர்,நிலம்,இயற்கைவளங்கள் மீதும்
தீராப்பசியுடன் இருக்கிறது,
ஆக்கிரமிப்பின் தாகங்கள்...

நீரை குழாய்கள் வழியே
துளைபோட்டு ஊறிஞ்சுவிட்டார்கள்,
இயற்கை வளங்களை கூறுபோட்டு
விற்றுவிட்டார்கள்,காற்றை
அலைக்கற்றைகளாக்கி
ஊழலாக்கி அரசியலாக்கிவிட்டார்கள்

கடல்நீரை மட்டும் ஏனோ,
நாட்டு எல்லை கற்களாக்கி
உயிர்ப்பலி மேடை
அமைத்துவிட்டார்கள்,

பல நாடுகளில்
தீவிரவாதமெனும் தாகத்தால்
மனித உயிர்களை கொன்று
தங்களது கோரப்பசிகளை
தீர்த்துவிட..வெப்ப தாகத்திற்கு
தண்ணீர் கேட்கும் சூரியனே..

பருவமழை பொழிக்காது,நீ
எங்களை ஏமாற்றியதால்,நாங்கள்
நீர் நிலைகளை மூடி உன்னை
வஞ்சித்தோம்...நீயும் செயற்கை
உலகில் வாழ்பவர்களை
தண்டிக்காமல்,அரசியல்வாதிகளைப் போல,
அப்பாவி மக்களையே
சுட்டெடுத்து,வாட்டி வதைப்பது
எவ்விதத்தில் நியாயம்...எதற்கும்,

உன் தாகத்திற்காகவும்,எங்களது
தாகத்திற்காகவும் உதவி கேளேன்...
உன் நண்பர் வருண பகவானிடம்!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT