கவிதைமணி

கோடை மழை : வேலூர்.வெ.ராம்குமார்

கவிதைமணி

சுட்டுபொசுக்கும் கதிரவனால்
அல்லோலப்படும் மக்கள்...
துண்டு துண்டு பாண்டங்களாய்
விரிசல் விடப்பட்ட பூமி!

பசுமைப் பொலிவையிழந்து
சருகு இலைகளோடு மரங்கள்,
வற்றிப்போன நீர்நிலைகள்,
மேய்ச்சல் நிலங்களில்
புற்களை தேடி அலையும் கால்நடைகள்,
விளைநிலங்களில்
பாத்திகட்டப்பட்ட நிலையில்
வாடிய பயிர்கள்,மரங்களின்
நிழல்களை தேடி ஏமாற்றமடையும்
வழிபோக்கர்கள்,தாகத்தால்
செத்து மடியும் பறவைகள்,
புழுதியடைந்த மாடி கட்டிடங்கள்,
மழைக்காக யாகத் தீ வளர்க்கும்
பக்தர்கள்,கண்களில் கனவோடும்,
நெஞ்சில் ஈரத்தோடும் மழைக்காக
காத்திருக்கும் விவசாயிகள்..

கோடை இடி முழக்கத்துடன்
பெய்யென பொழி மழையே..
மண்ணை மட்டுமல்ல,எங்கள்
மனங்களையும் குளிர்விக்க..
தேர்தல் தேதி போல இம்முறை
நீயும் ஒத்திபோடாதே,உன் கடமையை!

நீ பொய்த்தால்,மண்வளத்தை
மலடாக்கி,கூறு போட்டு விற்பனை
செய்ய பல கும்பல்கள்
காத்திருக்கவே செய்கின்றன...
ரியல் எஸ்டேட் என்ற பெயரிலும்!
நில புரோக்கர்கள் என்ற பெயரிலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT