கவிதைமணி

கோடை மழை: -உத்ரன்

கவிதைமணி
அனலாய்க் கொதிக்கும் சூரியக் கதிர்கள்அதில் வறுபடும் பூலோக உயிர்கள்!நீரைத் தேடி நீளமாய் அலைவதுஆற றிவு கொண்ட மனிதர் மட்டுமல்ல!விலங்குகள் பறவைகள் பாம்புகள் பூச்சிகளெனஅத்தனை உயிர்களும் ஆலாய்ப் பறக்கநீ மட்டும் ஏனோ இறங்கி வராமல்இருப்பது நியாயமா கோடை மழையே!எத்தனை கோடி வேண்டுமென்று சொன்னால்எங்கள் தலைவர்கள் கொடுத்து விடுவார்கள்!மேகத்தை அனுப்பி ஆசையைக் கூட்டிஏமாற்றும் வித்தையை நிறுத்திடு நீயும்!சொன்ன தேதியில் சொல்லும் இடத்தில்வந்து பெய்திட வாக்கு நீ கொடுத்தால்இன்னும் சில கோடிகள் எளிதில் கூடும்எப்பொழுதும் நீ திளைக்கலாம் பணத்தில்!லஞ்சமா    என்று    வாய்    பிளக்காதே!எங்கள்    ஊரில்    லஞ்சம்     என்பதுவாழ்வியலாகி ஆயிற்று அரை நூற்றாண்டு!ஆண்டுக்காண்டு அரசின் கடன் உயர...அரசியல்வாதிகள் சொத்துக்களோ பன்மடங்கு உயர்வு!கேட்க யாருக்கும் கிஞ்சித்தும் புத்தியில்லை!வாழ்க்கை இங்கே வளருது சிறையாய்வாக்காளருக்கும் கூட ஆயிரமாய் லஞ்சம்!நொந்து...வெந்து...நோயில் கருகிசெய்வதறியாது திகைத்தே நாங்கள்வருந்தும் போது வறுக்கும் கதிரவன்!அவனுக்கு உதவியாய் நீயும் இருந்தால்எவரிடம் போய் எம் குறை சொல்வது?பன்னீரும் பழனியும் இணையா நிலையில்மோடியும் எங்களை ஒதுக்கியே விட்டார்!இறங்கி வா நீயும்!எங்களைக் காப்பாற்ற!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT