கவிதைமணி

கோடை மழை: கோவை.நா.கி.பிரசாத்

கவிதைமணி

என் முன்னாள் காதலியை 
கண்ட சிலிர்ப்பு!
கோடையில் துளிகளின் 
நீர் கொடை தெறிப்பு!

மேக பார்லிமெண்டில் 
வெப்பத்தின் தீர்மானத்தை எதிர்த்து 
மழையின் வெளிநடப்பு!
அக்னி காற்றின் பிடியில் 
சிக்கிய பூமியின் பரிதவிப்பு!

மழையின் விரல்கள் 
மண்ணின் கதவை தட்ட தட்ட 
சுருண்டு படுத்த விதைகளும் 
எழுந்து வெளியே வருகிறது!

சனிக்கிழமை சாயங்காலமாய் 
நெஞ்செல்லாம் ஒரே நெகிழ்ச்சி!
கோடைமழை வரும் என்ற
நினைப்பின் மகிழ்ச்சி!

வறண்டு பிரிந்த நிலங்களுக்கிடையே 
ஓர் ஈர சமரசம்...
கோடைமழை இணைப்பின் 
பிணைப்பில் மண்ணேல்லாம்
வாச பரவசம்!

உட்கார மரமின்றி
உக்கிரமாய் ஊரைச்சுற்றும்
சூரியனை கொஞ்சம் சிறைப்படுத்தட்டும்
இக்கோடை மழைக்கம்பிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT