கவிதைமணி

கோடை மழை: சிவகுமரன் நடராஜன்

கவிதைமணி

பசுமை இழந்து வெயிலால்
செம்மை தாங்கிய
பயிர்களுக்கு பயனில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

காய்ந்த வயலுக்கும்
வெடித்த நிலத்துக்கும்
பசித்த விலங்குகளுக்கும்
இரை தேடும் பறவைக்கும் பயனில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

காய்ந்த வயிறு, கந்தல் ஆடை
போராடி போராடி புழங்கிப் போன
விவசாயி வாழ்விற்கு வளம் அளிக்க
கிஞ்சித்தும் வழியில்லை
எனினும் எங்களுக்கு நீ வேண்டும்
கோடை மழையே |

கானல் நீரை காணமல் போக செய்யவும்
தகிக்கும் கான்கிரீட் கட்டிடங்களை
தணிய செய்யவும், வெயிலில் வேகும்
தினக்கூலி சகோதர்களின் வியர்வை
துடைக்கவும், இல்லத்தரசிகளுக்கு
 இதமளிக்கவும் வா வா
கோடை மழையே |

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT