கவிதைமணி

கோடை மழை: வயலாமூர் வீ.கிருஷ்ணன்

கவிதைமணி

பாரி ஓரி காரி போல
வாறி வழங்கும் மாரி
நீரில் லாமல் குலைந்து மக்கள்
நிற்ப தைநீ பாரீர்.

குடிக்கக் கூட நீரில் லாமல்
குடத்தைத் தூக்கி ஓடி
கோடை வெப்பம் தாங்க ஓண்ணா
கொடுமை யைநீ பாரீர்.
        
பசிய றிந்து பாலை ஊட்டும் 
பாசத் தாயைப் போல்நீ
பயிர்த்தொ ழில்கள் செழித்து வளர
பக்கு வமாய்ப் பொழிவாய்.

குழவிக் குத்தாய் குழைத்து உணவை
கொடுப்ப தைப்போல் நீயும்
சுழன்ற டிக்கும் காற்றில் லாமல்
சுகமாய் மழையைத் தருவாய்.

அளவ றிந்து ஊட்டும் தாய்போல்
நிரைத்தால் குளம் ஏரி
வளமாய் வாழும் உயிர்கள் எல்லாம் 
உனக்கு நன்றி கூறி.
        
சுட்டெ ரிக்கும் கோடை வெப்பம் 
சுத்த மாக மாற்றி                 
மட்டில் லாத் மகிழ்ச்சி யோடு         
மக்கள் வழச் செய்வாய்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT