இருண்டுதான் கிடக்குது எதிர்காலம்!-ஆனாலும்
இருக்குது நம்கையில் விளக்கொன்று!
உருண்டே போய்விடும் நாட்களெல்லாம்!-நாம்தான்
உஷாராயிருந்து வளைக்க வேண்டும்!
உண்மை,உழைப்பு உறுதியென்று-என்றும்
ஓர்வழி கண்டிட்டால் வெற்றியுண்டு!
நன்மை,நேர்மை,பொதுவுடமையென்று-நாளும்
சிந்தித்தால் சிறப்பு மிகும்!
இருட்டைக் கண்டு பயந்திட்டால்-இங்கு
எதையும் சாதிக்க முடியாது!
திருட்டே உந்தன் கனவானால்-அப்புறம்
தினமும் தூங்க முடியாது!
உந்தன் நினைப்பே எதிர்காலம்!-அதன்
ஒவ்வொரு வினாடியும் உன்கையில்!
நிந்தனை மனதில் ஏதுமின்றி-நீ
நின்றிடு நிமிர்ந்து ஒளிபொருந்தி!
வாழப் போவது சில காலம்-அதில்
வம்புகள் வழக்குகள் தேவையில்லை!
மேயப் போகும் மாட்டினைப்போல்-உன்மனம்
மேய்ச்சலில் மட்டுமே லயிக்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.