கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:    அழகூர்.  அருண்.  ஞானசேகரன் 

கவிதைமணி
ஜல்லிக்கட்டை  நடத்தவேண்டி  தமிழ்நாட்டு  மக்கள்            ஜாதிமத  பேதமின்றி  அரசுடனே  இன்றுமல்லுக்கட்டி  நிற்கின்றார்  என்றாலும்  இதனை            மறுக்கின்றது  அரசாங்கம்  அறியாமை  யாலே !செல்லமாக  உணவூட்டி  காளைகளை  வளர்க்கும்            சிறப்புதனை  அன்னவர்கள்  வந்துகாண  வேண்டும் !எல்லாமும்  மேனகாவால்  வந்தவினை  தானாம்,            இவள்தானே  இன்னதனை  மறுத்துநிற்ப  தெல்லாம் !ஏறுதழுவல்  என்பதுவோர்   சங்ககாலம்  முதலாய்            இனியதமிழ்  நாடிதனின்  வீரவிளை  யாட்டே !மாறுபட்டக்  கருத்திதனில்  ஒருவருக்கும்  இல்லை ,            மறுத்திடுவோர்  அனைவருமே  அறியாதார்  தானே !கூரானக்  கொம்புடைய  காளைகளை  அடக்க            கொம்பைக்கூட  கொள்ளாத  இளைஞர்களின்  கூட்டம் !வீருகொண்டு  இறங்கிடுவார்  வெறுங்கையி  னோடு ,             வீரமரணம்  நேர்ந்தாலும்  விருப்பமுடன்  ஏற்பார் !காளைகளை  அரசாள்வோர்  காட்சிப்பொருள்  என்றே             கருதுவதால்  தானிந்தத்  தடுப்பாணை  எல்லாம் !காளைகட்கு  இன்னதனால்  துயர்நேர்ந்த  தாகக்             கதைகளிலும்  கேட்டதில்லை  இன்றுவரை  எங்கும் !தோளைத்தட்டி  இறங்குகின்ற  இளைஞர்கூட்டம்  எல்லாம்             துச்சமெனத்  தன்னுயிரை  மதித்திட்டுத்  தானே !வேளைவரக்  காத்திருப்பார்  காளைகளை  அடக்க ,              வீரமதைப்  பழிப்பதன்றோ  தடைசெய்வ  தெல்லாம் !காலகாலம்  நடந்துவரும்  வீரவிளை  யாட்டை             கபோதிகள்  தடுப்பதெலாம்  தவறான  ஒன்றே!சீலம்மிக்க  விளையாட்டில்  இன்னதுவும்  ஒன்றே             சீறிவரும்  காளைகளைப்  பிடிப்பதுவோ  கொடுமை ?வேலதனைக்  கொண்டிட்டு  ஸ்பெயின்நாட்டில்  இன்றும்            விலங்குகளை  குத்துகிறார்,  அக்கொடுமை  தன்னைப்போலெதுவும்  ஜல்லிக்கட்டில்  இல்லையென்ப  துண்மை ,             புரியாமல்  தடுப்பதெலாம்  வேண்டாத  ஒன்றே !வீரம்மிக்க  ஜல்லிக்கட்டின்  மகிமைதன்னை  உணரார்         விளக்கமெதும்  இல்லாதார்  என்பதுவே  உண்மை !தீரம்மிக்க  இளைஞர்களின்  வீரவிளை  யாட்டு ,        திளைப்புறுவார்  இளைஞரெலாம்  சேதிசொல்லக்  கேட்டு !கோரமது  நிகழ்வதெலாம்  வீரர்கட்குத்  தானாம் ,        குத்தாட்டம்  போடுகின்றக்  காளைகட்கு  இலையாம் !தாரமவளும்  கணவனுக்கு  திலகமிட்டு  அனுப்பத்         தான்விழைவாள்,  அன்னதுவே  தமிழ்மகளின்  பெருமை !வீரமரணம்  எனும்போதும்  விரும்பாதார்  இல்லை,           வெற்றிமகன்  எனப்போற்ற  விழைவதுதான்  உண்மை !யாரவனைத்  தடுத்திடுவார்  செல்லவேண்டாம்  என்றே,           இழிவன்றோ  மறவர்கட்கு  பங்கேற்கா  திருக்க !போரதனைப்  புரியச்செல்லும்  வீரத்தமிழர்  போலே,            புறப்படுவார்  ஜல்லிக்கட்டுக்  களமதனை  நோக்கி !காரணமிது  இன்னதென்று  அரசுசொன்னப்  போதும்            கருத்ததனை  ஏற்கமாட்டான்  வீரத்தமிழ்  மறவன் !     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT